Friday, 16 December 2011

இந்து சமயமும்; இந்துக்களின் அறியாமையும்...

இந்து சமயம் மிகவும் தொன்மையான சமயம் என்பது அணைவரும் அறிந்த ஒன்றே. நம்மில் எத்தனை பேர் இந்து சமயத்தைப் பற்றிய தெளிவு உண்டு என்று எண்ணி பாருங்கள். நம்மில் பலர் “இந்துக்கள்” என்ற பெயர்களிள் மட்டுமே வாழ்கின்றனர் தவிர, உண்மையான இந்து சமய கொள்கைகளையும் நீதிகளையும் அறியாமலும் அரை குறையாகவும் கடைப்பிடித்து வருகின்றனர். பொதுவாகவே, நம்மவர் இடையே எதை கேட்டாளும் “தெரியாது” என்று பதில் தருவது மிகவும் குறைவு. நமக்கு தெரியாததைக் கூட தெரியும் என்று கூறுவதே நம்மவர்களின் சிறப்பு. அதிலும் தெரியாத கேள்விக்கு தெரிந்ததைப் போல மளுப்பி குழப்பி மற்றும் அவருடைய தரப்பில் நான்கு ஐந்தை சேர்த்து கூறுவதில் நாம் தான் முடி சூட மன்னர்கள்..!! 

ஆதிசங்கர் இந்து சமயத்தை ஆறு பிரிவுகளாகப் பிரிந்தார். அதில் இன்றும் சிறந்து விழங்குபவை சைவ சமயமும் வைனவ சமயமும் ஆகும். ஒரு சிலரிடம் இவை இரண்டிற்கும் என்ன வேற்றுமை என்று வினாவினால், அவர்களின் பதில்; சைவ சமயம் என்றால் சைவம் உண்ணுபவர் சமயம், வைனவ சமயம் என்றால் அசைவ உண்பவரின் சமயம் என்று பதில் வருகிறது. இதைக் கேட்க்கும் போது நமக்கே புல் அரிக்கிறது அல்லவா...? இப்படிதான் நமது சமயம் நிலைக்குலைந்து வருகிறது. சைவ சமயம் சிவனை முழுமுதற் கடவுளாக கொண்டு வழிப்படுவோரின் சமயமாகவும் வைனவ சமயம் மஹா விஷ்னுவை முழுமுதற் கடவுளாக கொண்டு வழிப்படுவோரின் சமயமாகவும் விளங்குகிறது. நாம் சமய பிரிவுகளால் பிரிந்தாலும் இந்து சமய நீதி ஒன்றே. பிற சமயத்தைக் காட்டிலும் இந்து சமயத்தில் அதிகமான இறைமார்களும் இறைவியார்களும் வழிப்படுவதை நாம் உணர்வோம். பல வடிவங்களில் பல பெயர்களில் சிலை வைத்து வணங்குகிறோம். பல வேளைகளில் மற்ற இனத்தவர்கள் இதை பற்றி கேள்வி எழுப்புவது உண்டு. அதற்கு நாம் கொடுக்கும் பதில்:

Jonh: Why in your religion was too many gods...
Samy: Because it’s showing my religion too strong and powerful..!!!

இந்த கேள்விக்கு ஒர் இந்துவாக இருந்துக் கொண்டு பதில் தெரியாது என்று சொன்னால் அவமானம் என்பதால் ஏதாவது ஒரு பதிலை சொல்லி ஆக வேண்டும் என்று தனது மதத்தை உயர்த்தி கூறும் வகையில் தனது சொந்த கருத்த்க்களைப் பாடிவிடுவார்கள். இதை கேட்கும் பிற இனத்தாரும் தலை சொறிந்த படியே சென்று விடுவார்கள். அதோடு முடிந்தது என்று நம்மவர்களும் இதைப் பற்றி உன்மை என்னவென்று அறிந்து கொள்ள சற்றும் முயலாமல் இதே பதிலை பலரிடம் பாடி செல்வார்கள்.

ஏன் இந்து சமயத்தில் மட்டும் இத்தனை கடவுள்...?

இந்து சமயக் கோட்பாட்டின் படி நமக்கும் இறைவன் ஒருவனே. இறைவன் பொது நிலையை அடையும் போதுதான் அவன் பல பெயர்களிளும் வடிவங்களிளும் காட்சி அளிக்கின்றான். உதாரணத்திற்கு, சைவ சமய அடிப்படையின் படி சிவனே முழுமுதற் கடவுள். சிவம் என்பது ஆணோ, பெண்ணோ அல்லது ஆணும் பெண்ணுமோ, ஆகிய நிலையைக் கடந்தது. ஆனால், சிவன் என்கிற நிலையில் அப்பேரறிவு சிவசக்தி நிலையை ஏற்று ஆணாகவும் பெண்ணாகவும் ஆணும் பெண்ணுமாகவும் குறிக்கப்படுகின்றது. அச்சிவமே பின்பு உயிர்களின் மீது கொண்ட கருணையின் காரணமாக, உயிர்களுக்கு அருள் தொழில் புரிவதற்காகத் தானாகவே இறங்கி வருகின்ற நிலையில் ‘சிவன்’ ஆகின்றது. இதனையேப் பொதுநிலை என்கின்றோம். உண்மை, அறிவு, இன்பமாய் இருக்கின்ற சிவம் என்கின்ற பரம் பொருள் பொதுநிலைக்கு வருகின்ற போது அருவம் (உருவம் இல்லாத நிலை-பரமசிவம், பராசக்தி, பரநாதம், பரவுந்து) அருவுருவம்( வடிவம் உண்டு, உருவம் இல்லாத நிலை-சிவலிங்கம்) உருவம் என்று வருகின்றது.

“அப்படி என்றால் சிவன் மட்டும் தான் உண்மையா...? அம்மன், விநாயகர், முருகன் என்று மற்ற பல தெய்வங்கள் எல்லாம் பொய்யா..?” என்ற கேள்வி எல்லோரிடமும் எழும்.
இதற்கு பதில்: இல்லை..!

நம்மில் பலர் மேலோகித்தில் சிவன் பார்வதியுடன் குடும்ப வாழ்கையை வாழ்ந்துக் கொண்டிருப்பதாக நிணைத்துக் கொண்டிருக்கின்றனர். சிவன் தந்தையாகவும் பார்வதி தாயாகவும் விநாயகர் இவர்களின் மூத்த பிள்ளையாகவும் முருகன் இளைய மகனாகவும் இந்துக்களிடையே பரவலான எண்ணம். மனிதர்களைப் போல் சிவத்திற்கும் சக்திக்கும் இல்லறத்தில் வருவதுபோல, கணவன் மனைவிக்கு இடையில் வரும் சண்டைகள் போல சண்டைகள் போட்டு கொள்வார்கள் என்றெல்லாம் கற்பனை செய்வது உண்டு. ஆனால் இது அணைத்தும் உண்மை இல்லை...!!!

அம்மன்

சிவம் தன் சிறப்பு நிலையில் உண்மை, அறிவு, இன்ப வடிவாய் இருக்கின்ற பரம்பொருள் பொதுநிலைக்கு உயிர்களுக்கு அருள்புரிவதற்காக எடுத்த இன்னொறு வடிவம் அம்பாள் அல்லது அம்மன் வடிவம். தமிழர்களைப் போன்று பென்களுக்கு உயரிய இடத்தைக் கொடுத்த பெருமை வேறு யாருக்கும் கிடையாது. தமிழர்கள், ஆறுகளை கங்கை, யமுனை, காவிரி, சரசுவதி என்று சொன்னார்கள். தாய்யின் மொழிக்கு தாய்மொழி என்று உயர்வித்தனர். அதற்கெல்லாம் முத்தாய்ப்பாய் பரம்பொருளின் ஆற்றலுக்கு, பலத்திற்கு, சக்திக்கு, அருளுக்கு, அம்மை என்றும் அம்பாள் என்றும் பெண் வடிவம் கொடுத்திருக்கிறார்கள் தனித்தன்மை வாய்ந்த தமிழர்ள்..! இறைவனிடமிருந்து வெளிப்படும் அருள், ஒரு நல்ல அம்மாவைப் போன்று கருணையே வடிவாய் இருந்ததினாலே அவ்வருளுக்கு, ஆற்றலுக்கு, சக்திக்கு அம்மை அல்லது அம்பாளென்று பெயரிட்டு வழிப்பட்டனர் நம் முன்னோர். அவ்வருளுக்குப் பென் வடிவமும் கொடுத்தனர்.

இறைவன் அன்பு என்றால் அவன் ஆற்றல் அருள்.. இறைவன் சுடர் என்றால் அவன் அருள் அச்சுடரின் வென்மை ஆகும். எனவே இறைவனின் திருவருள் அல்லது அம்பாள் என்பது இறைவனின் ஒரு கூறே தவிர வேறு ஒருபொருள் அல்ல. நாம் நினைப்பது போல இறைவனும் இறைவியும் வேறு அல்ல..! அவை ஒன்றைவிட்டு ஒன்று பிரியாதவை. எனவேதான் சிவம் இல்லையேல் சக்தி இல்லை, சக்தி இல்லையேல் சிவமில்லை என்ற வழக்கு உண்டாயிற்று. அம்பாள் எனப்படுபவள் தத்துவமாகவும், பாமர (சாதாரன) மக்கள் விளங்கிக் கொள்ளவுமே இவ்வாறு மனைவியாகவும், மகளாகவும், தாயாகவும் இறைவனுக்கு சொல்லப்படுகிறாள்  இதை திருமூலர் “அரனுக்கு மனோன்மனி தாயும், அரனுக்கு மனோன்மனி மகளும், அரனுக்கு மனோன்மனி நல்தாரமுமாமே” என்று அழகாக குறிப்பிடுவார்.

அம்பாளுக்குத் தரப்படும் பெயர்களும் சிவத்தின் அருளாய்த் திகழும் சக்தியின் இயல்பை ஒட்டியேயாகும். திருவருளைப் போர்களத்தில் துர்க்கை எனவும், சினமிகுந்த கோலமாய் காளி என்றும், அனத்துச் செல்வங்களையும் வழங்குகின்றபோது பவானி என்றும், புவனத்திற்கு அரசியாக புவனேஸ்வரி என்றும், அகிலத்திற்கு அரசியாய் அகிலாண்டேஸ்வரி என்றும், எல்லாம் உலகங்களுக்கும் பேரரசியாய் இராசராசேசுவரி என்றும், ஓங்கார பிரணவமாய் ஓங்காரி என்றும், ஆங்காரம் உடையவளாய் ஆங்காரி என்றும் அழகுமிக்கவளாய் சிங்கரி என்றும் மீனைப்போன்ற கண்களை உடையவளாக மீனாட்சி என்றும், விசாலமான கண்களை உடையவளாக விசாலாட்சி என்றும் சிவனைக் காமிக்கின்ற கண்களை உடையவளாக சிவகாமி என்றும் ஏகம்பநாதரை காதல் கொள்வதினால் காமாட்சி என்றும் அவளின் திருவருளுள் வடிவங்களில் சிலவற்றை கூறுவோம். பயிர்கள் செழிப்பாக வளர மழையையே நம்முன்னோர்கள் நம்பியிருந்தனர். மழையை மாரியென்றும் தமிழில் அழைப்பார்கள். இத்தகைய மாரியை (மழையை) இறைவனின் திருவருளாகவே பார்த்தனர். அழுத பிள்ளைக்கு பால் தருவது தாயே. தங்களின் பயிர்கள் வாடிடாமல் இருக்க மழையை அருளிய இறைவனின் அருளை தாயின் கருனையாகவே எண்ணி அவ்வருளுக்கு பெண் வடிவம் தந்து ‘மாரியம்மா’ என்று வணங்கினர். மழை முத்து முத்தாய் பெய்வதனால் முத்து மாரியம்மா என்றார்கள். கர்ய்மேகம் திரண்டு மழை பெய்வதனால் கருமாரியம்மன் என்று சொன்னார்கள்.

இறைவனைத் தந்தையாகவும் அவன் திருவருளைத் தாயாகவும் கொண்டு காணுகின்றபோது உயிர்களின்னும் நெருக்கமாக உறவுகொண்டு பக்திசெலுத்த வாயில் இருக்கின்றது என்பதனாலேயே நம் முன்னோர்கள் இப்படியெல்லாம் சொல்லி வைத்தனர்.


விநாயகர்

விநாயகர் யார் என்று கேட்டால் நம்மில் பலர் அவர் சிவனுடைய மூத்த மகன் என்பர். ஏன் என்றால் இதை தானே நம்முடைய அப்பா அம்மா காலம் காலமாக நம்மிடம் கூறி வருகின்றனர். “அப்பா அம்மா நம்மிடம் பொய்யா சொல்வார்கள்” என்று எண்ணி நாமும் அதனை முழுமையாக நம்பி விடுவோம். பெற்றோர்களுக்கு யார் கூறினார் என்று கேட்டால், அவர்களுடைய பெற்றோர்கள் என்று பதில் வரும். நம் பெற்றோர்களும் இதை பற்றிய உண்மையை ஆராயவும் இல்லை, நமக்கும் இதைப் பற்றி தெரிந்துக் கொள்ள நமக்கு நேரமும் இல்லை. உண்மையில் விநாயகர் சிவனார்ருடைய மூத்த மகனோ அல்லது முருகனின் அண்ணணோ கிடையாது. பெயரோ, அடையாளமோ, வடிவமோ இல்லாத சிவப்பரம் பொருள் உயிர்களின் மீது கொண்ட கருணையின் காரணமாகப் பொது நிலைக்கு வருகையில் தாங்கிய முதல் வடிவம் என்கின்றோம். இதனையே அருணகிரிநாதர் “நாத விந்து கலை ஆதி நமோ நம” என்று பாடுவார்.நாதம் என்பது ஓசையைக் குறிக்கும். இதனையே பிரணவம் அல்லது ‘ஓம்’ என்கிறோம். ‘ஓம்’ என்ற மந்திரத்தில் ‘அ+உ+ம்’ என்கின்ற மூல எழுத்துக்கள் அடங்கியுள்ளன. இவை சிவப்பரம் பொருளின் அருளான பிரமன், திருமால், உருத்திரன் என்கின்ற கூறுகளை உணர்த்தி நிற்கின்றன.

இறைவன் முதன்முதலில் ஓசை வடிவமான பிரணவமாகத் தோன்றவே பிரணவமே உலகத் தோன்றுதலுக்கு அடிப்படை என்று கூறுவர். ‘ஓம்’ என்கிற பிரணவத்தின் மறுவடிவமே விநாயகர் என்று கூறுவர். ‘வி’ என்றால் உலகம். ‘நாயகன்’ என்றால் தலைவன். உலகத்திற்கு முதலில் தோன்றிய தலைவன் என்று விநாயகரை இதனாலேயே குறிப்பிடிகின்றோம். எனவே விநாயகரும் சிவப்பரம்பொருளும் வேறு அல்லது தந்தையும் மகன் என்கிற தவறான புரிந்துணர்வுகளை நாம் நீக்கி கொள்ள வேண்டும். உண்மை, அறிவு, இன்பமாய் (சத்து, சித்து, ஆனந்தம்) இருக்கின்ற சிவப்பரம்பொருளே ஓசை வடிவமாய் வருகின்ற போது விநாயகராக வருகிறது என்று சைவர்கள் உணர்வார்கள்.


முருகன்

முருகனும் விநாயகரை போல சிவனுடைய மகன் அல்ல. சிவன் அறிவு வடிவமாக, ஒளி வடிவமாக வருகின்றபோது அதை முருகன் அல்லது ஞானபண்டிதன் என்கிறோம். எனவேதான் முருகனுக்கு அருவுருவமாக ஆழ்ந்த அகன்ற நுண்ணியதாக இருக்கின்ற வேலைச் சமமாகச் சொல்கின்றோம். உலகைத் தோற்றுவித்து உயிர்களுக்கு அருள்புரிய இறைவன் முதலில் ஓசையாகவும் பின்பு ஒளியாகவும் தன் திருவருளை வெளிப்படுத்தியதாகச் சைவம் குறிப்பிடுகிறது. எனவேதான் ஓசையாக இருக்கின்ற விநாயகர் வடிவத்தை அண்ணன் என்றும் அடுத்து வருகின்ற ஒளிவடிவத்தை முருகனாகக் கூறி தம்பி என்று அழைக்கும் வழக்கு வந்தது. வள்ளியும் தெய்வானையும் (கிரியா சக்தி, இச்சா சக்தி) முருகன் வடிவில் ஞானமாய் வருகின்ற சிவனின் சக்திகள் அல்லது ஆற்றலே தவிர மனைவியர் கிடையாது.

முருகன் ஆண்டியாய் நிற்கின்ற கோலம் உயிர்கள் தவம் இயற்றிப்பற்றுக்களை விட்டு ஞானமாய்த் திகழ வேண்டும் என்பதாகும். அதே போன்று வள்ளித் தெய்வயானையோடு இல்லற கோலத்தில் இருப்பது உயிர்கள் போகங்களை அனுபவித்து ஞானம், பெற வேண்டும் என்பதாம். எனவே சைவத்தைப் பொறுத்த மட்டில் இல்லறத்தில் இருந்து நல்லறம் இயற்றியும் ஞானம் பெறலாம், அல்லது துறவற்த்தில் இருந்து தவம் இயற்றியும் ஞானத்தைப் பெறலாம் என்பதே ஆகும். அறிவு என்பது என்றும் இளமையாகவும் அழகானதாகவும் இருப்பதால் சிவப்பரம் பொருளான முருகனை இளமையாகவும் அழகாகாகவும் நம் முன்னோர் உருவகப்படுத்தினர். தமிழ் என்றும் இளமையாகவும் அழகாகவும் இருப்பதானால் தமிழையும் முருகனையும் ஒன்று என்றும் முருகனை தமிழ் கடவுள் என்றும் அழைக்கின்றனர்.

இறைவன் தன் சிறப்பு நிலையில் இருந்து பொதுநிலைக்கு மாறும் போது பல வடிவங்களிளும் பெயர்களிளும் அழைக்கப்படுகிறன். இதனாலே நம் சமயத்தில் பல தெய்வ வடிவங்கள் இருக்கின்றதே தவிர, இறைவன் மேல் உலகில் மனைவி மக்கள் என்று இல்லற வாழ்வு நடத்துவது கிடையாது..! இதனால்தான் திருமூலர் “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்று கூறுகிறார். இதனை உணர்தும் வகையில் தான் சில ஆலயங்களிள் கருவரையின் முன் இருபுறத்திலும் இருக்கும் சிலைகளின் கைவிரல்கள் ‘ஒன்று’ என்பதை குறிக்கின்றது. இதற்கு அர்தம் “ உள்ளே இருப்பது எத்தனை இறைவனின் வடிவங்களாக இருப்பினும், அவை அணைத்தும் இறைவன் ஒருவனையே குறிக்கிறது”. ஆகையால் உண்மையான சமயத்தை அறிந்து கொண்டு, அதனையே நம் வாழ்வில் கடைப்பிடிப்போம்.


_மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்


* இந்த கட்டுரை சில சமய நூல்களின் கருத்துக்களையும் எனது சொந்த கருத்துக்களையும் உள்ளடக்கியுள்ளது. இக்கட்டுரை குறிப்பாக யாரையும் சாடவும்கிடையாது. இக்கட்டுரையில் எழுத்து, இலக்கன மற்றும் வாக்கிய அமைப்பில் எதேனும் தவறுகள் இருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன். தமிழை கொல்ல வேண்டும் என்பது எனது நோக்கம் அல்ல. இந்த கட்டுரையின் உள்ளடக்கம் உங்களுக்கு தெளிவனை வழங்க வேண்டும் என்பதே எனது உண்மை நோக்கம்..!!

Tuesday, 27 September 2011

Toothpicks Art


A miniature city made out of millions of toothpicks. It took Stan Munro (38) 6 years to build this toothpick city. He used 6 million toothpicks and 170 liters of glue. He can spend until 6 months to create a building and each of his creations is built to 1:164 scale. He works at the Museum of Science and Technology in Syracuse, New York (USA). Look at the amazing works of one of the most patient men in the world.